நடுரோட்டில் இளம்பெண்களுடன் பைக்கில் வீலிங் செய்த இளைஞன் - திடுக்கிடும் வீடியோ

Viral Video Crime Mumbai
By Sumathi Apr 02, 2023 07:34 AM GMT
Report

இளைஞர் ஒருவர் இரு பெண்களை பைக்கில் வைத்துக்கொண்டு அபாயமான சாகசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

பைக் வீலிங்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் ஒரு இளைஞர் இரு பெண்களை பைக்கில் வைத்து செய்த சாகசம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆபத்தான வீடியோ போலீஸார் கவனத்திற்கு வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடுரோட்டில் இளம்பெண்களுடன் பைக்கில் வீலிங் செய்த இளைஞன் - திடுக்கிடும் வீடியோ | Man Dangerous Stunt With 2 Women On Bike Mumbai

அந்த வீடியோவில் ஒரு இளைஞர் தனது பைக்கில் முன் பகுதியில் ஒரு பெண்ணையும் பின் பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்து நடுவே இவர் அமர்ந்து வேகமாக வண்டி ஓட்டுகிறார்.

வைரல் வீடியோ

மூன்று பேருமே ஹெல்மெட் அணியாத நிலையில், முன்பகுதியில் உள்ள பெண்ணின் வண்டி ஓட்டும் இளைஞரை பார்க்கும் விதமாக திரும்பி அமர்ந்துள்ளார். அந்த இளைஞரோ தனது பைக்கில் வேகமாக ட்ரிப்பிள்ஸ் போனது மட்டுமல்லாது, முன்பக்கத்து சக்கரத்தை உயரத் தூக்கி அபாயமான முறையில் வீலிங் செய்கிறார்.

பொதுசாலையில் இத்தகைய செயல்பாடு கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து வண்டியை ஓட்டிய நபர் மற்றும் இரு பெண்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.