விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 'ஹிஜாப்' அணிந்து குத்தாட்டம் - இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் ஹிஜாப் அணிந்து நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹிஜாப் அணிந்து நடனம்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, கழிஞ்சூர் பகுதியில் கடந்த 21ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தின்போது கழிஞ்சூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற 23 வயது இளைஞர் இஸ்லாமிய பெண்கள் அணியும் ‘ஹிஜாப்’ உடையை அணிந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடலுக்கு நானமாடியபடி வீதியில் சென்றார்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமிய அமைப்பினர், ‘மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாக’ கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
கைது
இந்நிலையில் கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஆசிர் தங்கராஜ், விருதம்பட்டு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரளித்தார்.
அந்த புகாரின் பேரில் ‘இரு மதங்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டும் வகையிலும், கலகம் மற்றும் கிளர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்திலும் செயல்பட்டதாக’ ஹிஜாப் அணிந்து நடனமாடிய இளைஞர் அருண்குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட அருண்குமாரின் நண்பர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.