அதிகாலை 3 மணிக்கு கூவிய சேவல்..பக்கத்துவீட்டுக்காரர் செய்த வினோத சம்பவம் - பகீர்!
அதிகாலை 3 மணிக்கு சேவல் கூவும் சத்தம் கேட்டால் கோபமடைந்த ஒருவர் கோழி மீது புகார் அளித்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளா
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் அனில்குமார். இவர் தன்னுடைய வீட்டில் சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். தினமும் அதிகாலை மூன்று மணியளவில் கூவும் பழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இதனால் அனில்குமாரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராமகிருஷ்ண குரூப் என்ற முதியவர் நீண்ட காலமாகவே இரவில் தூக்கம் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.மேலும் அவரது அமைதியான வாழ்க்கை சீர்குலைந்து உடல்நிலை மோசமாகியுள்ளது.
சேவல்
இந்த நிலையில் கோபமடைந்த ராதாகிருஷ்ண குரூப் சேவல் மீது அடூரில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரில் அடிப்படையில் அதிகாரிகள் இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
அதில் அனில்குமாரின் வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததால் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது. இதையடுத்து நிலைமையைச் சரிசெய்ய, டாப் ஃப்லோரில் உள்ள கோழிகளை வீட்டின் தெற்குப் பக்கம் மாற்ற வேண்டும் என்று அனில்குமாருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டனர்.