15 வயதான மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய சித்தப்பா! அடுத்து நடந்த பகீர் சம்பவம்

investigation sexual assault
By Fathima Aug 13, 2021 11:25 AM GMT
Report

தமிழகத்தில் 15 வயது மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய சித்தப்பா சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிராமத்தை சேர்ந்த 15 வயதான மாணவி ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

10ம் வகுப்பு படித்து வந்த ரேகா, 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், ரேகாவின் சித்தப்பாவே வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே கிராமத்தில் உள்ள குளக்கரையில் நபர் ஒருவர் சடலமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், தேடி வந்த குற்றவாளி என தெரியவந்தது.

அண்ணன் மகளை சீரழித்தது மட்டுமில்லாமல் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.