மனைவியின் இன்ஸ்டா காதலனை ஃபேக் ஐடி மூலம் மயக்கி ஷாக் கொடுத்த கணவன்!

Tamil nadu Thoothukudi Instagram Crime
By Jiyath Nov 03, 2023 07:51 AM GMT
Report

இன்ஸ்டாகிராமில் பெண்களை மிரட்டி மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்ட கணவர் ஒருவர் ஃபேக் ஐடி மூலம் சிக்க வைத்துள்ளார்.

மனைவியுடன் தொடர்பு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மனைவி 2022ம் ஆண்டு பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற மனைவி 6 மாதங்கள் கழித்து குழந்தையுடன் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

மனைவியின் இன்ஸ்டா காதலனை ஃபேக் ஐடி மூலம் மயக்கி ஷாக் கொடுத்த கணவன்! | Man Cheating Girls Insta Victim Found By Fake Id

வந்தது முதல் மனைவியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் இருந்துள்ளது. மேலும், செல்போன் பேசுவது இன்ஸ்டாகிராமில் சேட் செய்வது போன்ற செயல்களில் மனைவி ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த கணவர் இதுகுறித்து மனைவியிடம் கேட்டதினால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவியின் செல்போனை அவருக்கு தெரியாமல் கணவர் பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதில் தனது மனைவி 'மாஸ் சுந்தர்' என்ற ஐடியுடன் இன்ஸ்டாகிராமில் பேசி வந்தது கணவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து மனைவியிடம் கேட்டபோது மீண்டும் சண்டை ஏற்பட்டு, மனைவி கோவித்துக்கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும், விவாகரத்தும் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த கணவர், அந்த மாஸ் சுந்தர் என்ற நபரை கண்டறிய திட்டமிட்டு 'நந்தினி' என்ற பெயரில் போலி கணக்கு ஒன்றை இன்ஸ்டாகிராமில் உருவாக்கியுள்ளார்.

ட்விஸ்ட் வைத்த கணவர்

பின்னர் அந்த கணக்கிலிருந்து மாஸ் சுந்தருக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். உடனே மாஸ் சுந்தர், பெண் என நினைத்து நந்தினி என்ற கணவனின் ஐடிக்கு தொடர்ந்து பேசிவந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், ஆபாசமாக பேச ஆரம்பித்தவர், பாலுணர்வை தூண்டும் விதமாக பேச்சு கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மனைவியின் இன்ஸ்டா காதலனை ஃபேக் ஐடி மூலம் மயக்கி ஷாக் கொடுத்த கணவன்! | Man Cheating Girls Insta Victim Found By Fake Id

பின்னர் பல பெண்களின் ஆபாசப்படங்களை அனுப்பி வந்த மாஸ் சுந்தர், ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மனைவியின் ஆபாச புகைப்படத்தையே அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார், தேடுதல் வேட்டை நடத்தி சுந்தர் என்ற இளைஞரை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்தனர். அதில் ஏகப்பட்ட பெண்களின் ஆபசப் புகைப்படம் இருந்துள்ளது.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் " ஐடி ஊழியர் போல டிப் டாப் உடையணிந்து பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், வெளிநாடு வாழ்க்கை வாழ்வது போல் புகைப்படங்களை பதிவிட்டு திருமணமான மற்றும் இளம்பெண்களை நட்பு வட்டாரத்தில் வீழ்த்தியுள்ளார். பின்னர் அந்த பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களை மிரட்டி தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து சுந்தரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.