ஐஸ்கிரீம் வாங்க ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டால் பரபரப்பு!

helicopter icecreamshop
By Irumporai Aug 12, 2021 04:23 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கனடாவில் ஐஸ்கிரீம் கேக் வாங்குவதற்காக திடீரென நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டிற்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கனடா நாட்டில் உள்ள டிஸ்டேல் நகரின் மத்தியில் வியாழக்கிழமை மதியம் அன்று ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியுள்ளது. அந்த ஹெலிகாப்டர் மருத்துவ ஆம்புலன்ஸ் வண்ணம் பூசப்பட்ட நிலையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஐஸ்கிரீம் வாங்க  ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டால் பரபரப்பு! | Man Charged Stopping Helicopter Ice Cream Shop

மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் அதனை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 34 வயதான அந்த பைலட்டின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.