பிரியாணி கடையின் ஃப்ரீஸரில் இளைஞரின் உடல்: அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேசத்தில் மூடப்பட்டிருந்த பிரியாணி கடையில் இளைஞர் ஒருவரின் சடலம் இருந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
பிரியாணி கடையில் சடலம்
லக்னோவில் Bakshi Ka Talab பகுதியில் உள்ள கடையில் இருந்தே, நேற்றைய முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடனடியாக விரைந்து வந்த பொலிசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபரின் பெயர் விஜய் பால் என தெரியவந்துள்ளது.
பொலிசார் விசாரணை
மேலும் பிரியாணி கடையின் உரிமையாளரின் தந்தை இறந்த காரணத்தினால், கடை நான்கு நாட்கள் மூடப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
”தினக்கூலியாக வேலை செய்து வந்த விஜய் பால், 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மதுவுக்கு அடிமையானவர் எனவும்” அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே விஜய் பாலின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.