காரை பழுது பார்க்க 17 லட்சம் கேட்டதால் ஆத்திரம் - வெடி வைத்து தகர்த்த உரிமையாளர்!
பின்லாந்து நாட்டில் டெஸ்லா காரை பழுது பார்க்க 17 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்த உரிமையாளர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் கார் ஒன்றை அதன் உரிமையாளர் வெடிவைத்து தகர்க்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இதுகுறித்து விசாரித்தபோது தெற்கு பின்லாந்தின் கிம்மென்லாக்சோ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளளது தெரிய வந்தது. டூமாஸ் காட்டைனேன் என்பவர் தனக்கு சொந்தமான டெஸ்லா காரை கடந்த சில தினங்களுக்கு முன் பழுது பார்ப்பதற்காக ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார்.
அவர் காரை ஒப்படைத்த சில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது அவரது காரை பழுது பார்ப்பதற்கு ரூ .17லட்சம் (இந்திய மதிப்பில் ) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது காரை 17 லட்சம் கொடுத்து சரிபார்ப்பதற்கு பதிலாக 30 கிலோ டைனமைட்டைப் பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளார். அவர் அந்த காரை வெடிக்க செய்வதற்கு முன் பொம்மிஜட்காட் என்ற யூடியூப் சேனலின் உதவி மூலம் அந்த நிகழ்வை படம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.