ஒரே ஒரு கரப்பான் பூச்சிதான்.. - அதை கொல்ல முயன்று வீட்டையே வெடிக்க வைத்த நபர்!
கரப்பான் பூச்சியை கொல்லும் முயற்சியில் வீடே வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்த வீடு
ஜப்பானில் உள்ள குமாமோட்டோ என்ற நகரில் கடந்த டிசம்பர் 10 தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் கரப்பான் பூச்சி பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் அதன் உரிமையாளர் பெரிய அளவில் பூச்சிக்கொல்லியைத் தெளித்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துரதிஷ்டவசமாக மின் இணைப்பின் அருகில் பூச்சிக்கொல்லியை அவர் தெளித்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் கேலி
இந்த வெடி விபத்தில் வீட்டு உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கேலி,கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
அதே சமயம் விழிப்புணர்வையும் தூண்டியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ரணகளங்களுக்கு மத்தியிலும் அந்த கரப்பான் பூச்சி இறந்து விட்டதா என நெட்டிசன்கள் கேட்டு சிரிப்பலையை ஏற்படுத்தி வருகின்றனர்.