வாயை மூட சொன்ன மனைவி - உதட்டை கடித்த கணவரால் 16 தையல்கள்
கணவர் மனைவியின் உதட்டை கடித்ததில் அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளது.
16 தையல்கள்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நாக்லா பூச்சனில் வசித்து வரும் பெண்ணின் உதட்டை அவரது கணவர் கடித்ததில் அதிகளவு ரத்தம் வெளியேறி 16 தையல்கள் போடப்பட்டுள்ளது.
அவரால் வாயை திறந்து பேச முடியாத நிலையில் இது குறித்து எழுத்தின் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வாக்கு வாதம்
இந்த புகாரில், வெள்ளிக்கிழமை(24.01.2025) மாலை, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த அவரது கணவர் விஷ்ணு எந்த காரணமும் இல்லாமல் சண்டையிட்டுள்ளார். அவரை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் சகோதரியையும் தாக்கியுள்ளார்.
அவரை கொஞ்சம் நேரம் அமைதியாக இருக்குமாறு இந்த பெண் கூறியுள்ள நிலையில், அவரது உதட்டை கடுமையாக கடித்துள்ளார். கணவர் தாக்கியது குறித்து தனது மாமியார் மற்றும் மைத்துனரிடம் முறையிட்ட போது அவர்களும் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துள்ளார். அன்று முதல் கணவர் மற்றும் அவரது தாய், சகோதரர்கள் தலைமைறைவாகியுள்ளனர்.