கார் மீது மோதிய பைக் - இளைஞரின் கொடுரத்தால் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட நபர்
முதியவரின் கைகளை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற இளைஞரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கார் மீது மோதி இருசக்கர வாகனம்
பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், சாகில் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கார் உரிமையாளர் முத்தப்பா. பைக்கில் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சாகில் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்ல கிளம்பினார். அப்போது கார் உரிமையாளர் முத்தப்பா இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் சாகில் தனது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது சாகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். முத்தப்பா இருசக்கர வாகனத்தில் இருந்து கையை விடவில்லை.
இந்த நிலையில் சாகில் முதியவரை சிறிது துாரம் முதியவரை இழுத்துச் சென்றார். அதில் முதியவர் முத்தப்பாவுக்கு சிறிது காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் சாகிலை கைது செய்தனர்.