சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்!
மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை தந்தை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று கட்ட வேலைகள் நடந்தது. அங்கு 35 வயதுடைய நபர் ஒருவர் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக வேலை செய்துள்ளார்.
அந்த நபர் அந்த நபர் வேலை நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டுக்கட்டையைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.