வலி தாங்காமல் கதறிய மாணவர்கள்; தீயாய் பரவும் வீடியோ - என்ன நடந்தது?
மாணவர்களின் சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சரமாரி தாக்குதல்
ஆந்திரா, ஜனசேனா மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் எக்ஸ் தளத்தில் சர்ச்சை வீடியோ ஒன்றை பதிவிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதில், ஒரு விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை ஒருவர் வயர் வைத்து சவுக்கால் அடிக்கிறார். அதில் அடி தாங்க முடியாமல் மாணவர் அழுகிறார்.
பரபரப்பு சம்பவம்
இதனை பதிவிட்டு ஸ்ரீகாகுளம் மாவட்ட ஐஏசி (Indian Army Calling) eன்ற பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் தலைவருமான நிறுவனராகவும் பசவ ரமணா என்பவர் இருக்கிறார். இவர் நரலோகேஷ் உறவினர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக் கூடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். . ராணுவம், கடற்படை, விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மாணவர்களிடம் 5 முதல் 10 லட்சம் வசூலிக்கிறார்கள்.
பயிற்சி முடிந்து மாணவர்கள் வேலை கேட்கும் போது அவர்களைச் சவுக்கால் அடிக்கின்றனர். இந்தக் கொடுமையைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.