சொத்துப்பிரச்சனை; அக்காவை கோடாரியால் கொடூரமாக தாக்கிய தம்பி - பதைபதைக்க வைக்கும் வீடியோ

Andhra Pradesh
By Karthikraja Jul 10, 2024 07:37 AM GMT
Report

சொத்துப்பிரச்சனை காரணமாக அக்காவை கோடாரியால் கொடூரமாக தம்பி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. 

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டம் பெனகச்சர்லா கிராமத்தை சேர்ந்தவர் ஜிலானி. இவருக்கு மகபூபி என்ற அக்கா உள்ளார். இவர்களுக்கு சொந்தமான வீடு தொடர்பான பிரச்னையில் அக்காவை கோடரியால் கொடூரமாக தாக்கி உள்ளார். 

man attacks sister by axe

அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் ஜிலானி தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கைது

இதில் பலத்த காயம் அடைந்த மகபூபி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தது ஜிலானியை கைது செய்துள்ளனர். 

கடந்த சில மாதங்களாக மகபூபி வசித்து வந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு ஜிலானி தொடர்ந்து மிரட்டி வந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.