நர்ஸின் முகத்தை கடித்து குதறிய இளைஞர் - நிர்வாணமாக சுற்றியதால் பரபரப்பு!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளைஞர் ஒருவர் புகுந்து செவிலியரின் முகத்தை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்
விருதுநகர், அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த நிலையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் ஆளில்லாத நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் இளைஞர் ஒருவர் புகுந்துள்ளார். பின்னர் அவர் அங்குள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.
அட்டூழியம்
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தனது உடைகள் அனைத்தையும் கழட்டி நிர்வாணமாக அங்கேயே சுற்றி வந்துள்ளார். அப்போது தங்கும் விடுதியில் இருந்து செவிலியர் ஒருவர் வெளியே வருவதைக் கண்ட அவர் அந்த செவிலியர் மீது பாய்ந்துள்ளார்.
பதறி நிலை தடுமாறிய செவிலியரை பலவந்தமாக பிடித்து அவரது முகத்தில் கடித்து குதறி உள்ளார். இதனால் அலறிய செவிலியரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்கள் வருவதற்குள் அந்த இளைஞர் விடுதிக்குள் சென்று செவிலியரின் உடையை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சம்பவமறிந்து வந்த போலீஸார், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த மர்ம இளைஞர் பாளையம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும், காயம்பட்ட செவிலியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.