தோளில் சாய்ந்து தூங்கிய நபர்....வெளுத்துவாங்கிய சகபயணி..வைரலாகும் வீடியோ

United States of America
By Karthick Aug 29, 2023 07:20 AM GMT
Report

மெட்ரோ ரயிலில் தன் தோள் மீது தெரியாமல் உறங்கிய நபர் ஒருவரை சகபயணி ஒரு தாறுமாறாக தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறங்கியதால் வந்த சண்டை     

ரயிலில் பலரும் உறங்கி கொண்டு போவதை எப்போதும் காண முடியும்.உறக்கத்தில் இருக்கும் அவர்கள் தவறுதலாக சில நேரங்களில் அருகில் அமர்ந்திப்பவரின் தோளில் சாய்ந்தும் விடுவார்கள். இது இயல்பான ஒன்றே என்றாலும், பல சமயங்களில் இது மற்றவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும்.

தோளில் சாய்ந்து தூங்கிய நபர்....வெளுத்துவாங்கிய சகபயணி..வைரலாகும் வீடியோ | Man Assaults Copassenger For Sleeping In Shoulder

அவ்வாறு தன் தோள் மீது சாய்ந்து தூங்கிய நபர் ஒருவரை கண்மூடி தனமாக நபர் ஒருவர் தாக்கியது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கண்மூடி தனமான தாக்குதல்  

அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் ஒரு மெட்ரோவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் ஒருவர் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த பயணியை பயங்கரமாக சண்டையிட்டு கொண்டிருந்தார். சில நொடிகளில், அவர் அருகில் அமர்ந்திருந்த பயணியுடன் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தோளில் சாய்ந்து தூங்கிய நபர்....வெளுத்துவாங்கிய சகபயணி..வைரலாகும் வீடியோ | Man Assaults Copassenger For Sleeping In Shoulder

அருகில் இருக்கும் நபர் தூக்கத்தில் தன் தோள் மீது சாய்ந்தால் இந்த சண்டை உருவாகி இருக்கிறது. திடீரென வாக்குவாதத்தில் அந்த நபர் அருகில் அமர்ந்திருந்தவரை கண்மூடி தனமாக தாக்கினர். இதன் காரணமாக எதிரில் அமர்ந்திருக்கும் பயணி ஒருவரும் சண்டையிட துவங்கினர். உடனடியாக அந்த இடம் சண்டைக் களமாக மாறுகிறது.