வேற்று கிரகவாசிகள் பற்றி எச்சரிக்க வந்த நபரை கைது செய்த காவல்துறை

Viral Photos
By Irumporai Jul 28, 2022 08:13 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவில் 29 வயது நபர் ஒருவர், வேற்று கிரக உயிரினங்கள் குறித்த தகவல்களை அதிபரிடமிருந்து பெற்றதாகக் கூறி, திருடிய டிரக்கைப் பயன்படுத்தி விண்வெளிப் படைத் தளத்திற்குள் நுழைந்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் புளோரிடாவைச் சேர்ந்த கோரி ஜான்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புளோரிடாவின் ப்ரெவர்ட் கவுண்டியில் உள்ள பேட்ரிக் ஸ்பேஸ் ஃபோர்ஸ் தளத்திற்குச் செல்வதற்கு முன்பு, 2013 மாடலான ஃபோர்டு எஃப்150-ஐ ஜான்சன் திருடியதாகக் கூறப்படுகிறது.

ஜான்சன் நுழைய முற்பட்ட விண்வெளி படை தளமான Patrick Space Force Base, ஸ்பேஸ் லாஞ்ச் டெல்டா 45இன் தாயகமாகத் திகழ்கிறது.

இங்குதான், கிழக்கு ரேஞ்ச் ஏவுகணை மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்தத் தளம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சுமார் 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது