Wednesday, Jul 23, 2025

விமான நிலையத்தில் தன் காதலிக்காக 55 வயது நபர் செய்த காரியம் - மடக்கி பிடித்த போலீசார்!

Singapore World Prison
By Vinothini 2 years ago
Vinothini

Vinothini

in உலகம்
Report

55 வயதான நபர் ஒருவர் தனது காதலியை வழியனுப்புவதற்காக அவர் செய்த காரியம் பரபரப்பை எப்பகுதியுள்ளது.

விமான நிலையம்

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் 55 வயது நபர் ஒருவர் விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதிக்குள் நுழைய, போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரை சிங்கப்பூர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

man-arrested-for-using-his-boarding-pass-wrongly

மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் போர்டிங் பாஸைப் பெறுவதற்காக, ஒரு விமானப் பயணச்சீட்டை பெற்று பின்னர், நாட்டை விட்டுச் செல்லும் தனது காதலியை வழி அனுப்புவதற்காக சாங்கி விமானநிலைய போக்குவரத்துப் பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்தது.

அறிக்கை

இந்நிலையில், விமான நிலையத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைய போர்டிங் பாஸ்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் உள்கட்டமைப்பு பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக அந்த நபர் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.

man-arrested-for-using-his-boarding-pass-wrongly

மேலும், போலீஸ் தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில், "சிங்கப்பூரில் இருந்து வெளியே செல்வதைத் தவிர வேறு காரணங்களுக்காக போக்குவரத்துப் பகுதிக்குள் நுழைய போர்டிங் பாஸைப் பயன்படுத்துபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$20,000 (12 லட்சம் ரூபாய்) வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.