கஞ்சா விற்பனைக்காக சாமியார் வேடமிட்ட நபர் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

chennai cannabissale
By Petchi Avudaiappan Dec 22, 2021 08:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

சென்ன்னையில் கஞ்சா விற்பனைக்காக சாமியார் வேடமிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் ராயபேட்டை, மைலாப்பூர், ஐஸ் ஹவுஸ் பகுதியில் மக்களுக்கு குறி சொல்லும் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ம்யிலாப்பூர் தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த தாமு(எ) சேகர் என்பவரை கஞ்சா வாங்குவது போல சென்று கைது செய்தனர்.

அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனையில் சில ஆண்டுகளாக ஈடுப்பட்டு வந்துள்ளாதும், யாருக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சாமியார் வேடம் அணிந்து சாமியாராக வலம் வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. 

மேலும் தாமு(எ) சேகர் கோவில்கள் அருகில் மாலை நேரங்களில் அமர்ந்து ஆடைக்குள் மறைத்து கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். மேலும், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜா மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தர்மராஜத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பிஆகியோர் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சாமியார் வேடமணிந்த தாமுவிடம் கொடுத்து விற்பனை செய்ய சொல்லி வந்தததும் தெரிய வந்தது.

இதனையடுத்து தேனியைச் சேர்ந்த ராஜா மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஆசைதம்பி ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.