7 மாத கர்ப்பிணியை துடிக்க துடிக்க கொலை செய்த கொடூர கணவர்

uttarpradesh pregnantwife dowry harassments
By Petchi Avudaiappan Sep 02, 2021 10:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

உத்தரப்பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணியை துடிதுடிக்க கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக இந்தியாவில் வரதட்சணை மரணங்கள் அதிகமாக நிகழத் தொடங்கியுள்ளன. தற்கொலை, கொலை என்ற ஒன்று மட்டும் தான் இந்த மரணத்தில் வித்தியாசமே தவிர கொடுமைப்படுத்துவது அனைவருக்குமே பொதுவாக அமைகிறது.

இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் மகாராஜ்கன்ச் மாவட்டத்தில் உள்ள பகவத்நகர் எனும் கிராமத்தில் சந்தோஷ் சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பிப்ரா பகுதியைச் சேர்ந்த சரோஜ் என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் சரோஜ் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருக்கிறார். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சரோஜை, வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியும் அடித்தும் வந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு ஆத்திரத்தில் இருந்த சந்தோஷ் தனது கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு மீண்டும் கொடுமைப்படுத்தியுள்ளார். அப்போது ஹாக்கி மட்டையால் கடுமையாக அடித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த சரோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சரோஜின் தந்தை ஹரிராம் சவுத்ரி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சந்தோஷை போலீசார் கைது செய்துள்ளனர்.