2 மகள்களை லாட்ஜூக்கு அழைத்து சென்ற தந்தை - கதவை உடைத்து அதிர்ந்து போன போலீசார்!
கேரளாவில் தனது 2 மகள்களை லாட்ஜூக்கு அழைத்து சென்று தந்தை செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை, மகள்கள்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சிவானந்தனா (வயது 12), தேவனந்தனா (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இவர் கடந்த மாதம்12-ம் தேதி தனது மகள்கள் 2 பேரையும் குருவாயூர் பாடிச்சேரே நாடாவிற்கு அழைத்துச்சென்றார். அங்கு லாட்ஜ் ஒன்றில் மூன்று பெரும் தங்கினர். அவர்கள் தங்கி இருந்த அறை வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்தனர்.
விசாரணை
இந்நிலையில், சோதனை செய்த பொழுது சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரது மகள்கள் அதே அறையில் இறந்து கிடந்தனர். மேலும் அவர்கள் ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் கிடந்துள்ளார்.
இவர்களது தந்தை பாதி உயிர் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது சிகிச்சைக்கு பின்னர் விசாரணை நடத்தியத்தில், ஒரு மகளுக்கு ஐஸ் கிரீமில் விஷம் கலந்து கொடுத்ததாகவும், இன்னொருவரை தூக்கில் தொங்க விட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.