ஸ்வீட் பாக்சில் ரூ.54 லட்சம் பணம் - விமான நிலையத்தில் மடக்கி பிடித்த அதிகாரிகள்

Delhi
By Thahir Sep 08, 2022 07:47 AM GMT
Report

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில ஸ்வீட் பாக்சில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள சவுதி அரேபியா நாட்டு கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஸ்வீட் பாக்சில் ரூ.54 லட்சம் பணம் 

நேற்று டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல ஜஸ்விந்தர் சிங் என்ற பயணி வந்துள்ளார்.

அவரின் மீது சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு கடை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

ஸ்வீட் பாக்சில் ரூ.54 லட்சம் பணம் - விமான நிலையத்தில் மடக்கி பிடித்த அதிகாரிகள் | Man Arrested For Hiding Rs 54 Lakh In Sweet Box

அப்போது அவர் கொண்டு வந்த ஸ்வீட் பெட்டியை பரிசோதித்துள்ளனர்.அதில் மறைத்து எடுத்து வரப்பட்ட சவுதி அரேபியா நாட்டு கரன்சி நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சுமார் 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,50,000 சவுதி ரியால்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜஸ்விந்தர் சிங்கை கைது செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.