டி-சர்ட் பெண்கள் மீது மோகம், ஒருநாளுக்கு 5 பேர் டார்கெட் - சுற்றி திரிந்த சில்மிஷ சைக்கோ!
சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சைக்கோ
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், இவர் இதே பகுதியில் கிடைத்த வேலைக்கு செல்வார் எனக் கூறப்படுகிறது.
இவர் நாளடைவில் வாடகைக்கு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னை திருமங்கலம், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து பூங்கா அருகில் மாலை நேரம் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகள்,
நடந்து சாலையில் செல்லும் பெண்கள் ஆகியோரிடம் அருகில் சென்று முகவரி கேட்பது போல் கேட்பார்.
அதனை பெண்கள் பார்த்து கொண்டிருக்கும்போது அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.
கைது
இந்நிலையில், ஒரு சிறுமியிடம் இவ்வாறு தொடர்ந்து செய்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர் போலீசிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், ஒரு சிசிடிவியில் பதிவானதை வைத்து அவரை தேடினர்.
மேலும், அவர் தங்கும் இடத்தை அறிந்து கொண்டு 3 நாட்கள் போலீசார் கொசு மருந்து அடிப்பவர்கள் போல் வேடத்தில் இருந்து அவரை விரட்டி பிடித்தனர்.
அப்பொழுது தப்பிக்க முயன்ற பொழுது கழிவு நீருக்குள் விழுந்து காய் முறிந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் கூறியதில், துப்பாட்டா அணியாத பெண்கள், டி-சர்ட் அணிந்த பெண்களை பார்த்தால் அவர்கள் மீதான மோகத்தில் பாலியியல் சீண்டலில் ஈடுப்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 5 பெண்கள் டார்கெட் என கடந்த 6 மாதங்களில் 200 மேற்பட்ட பெண்களிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
இரவு 6 மணி முதல் 8:30 வரை இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து இது போன்று பெண்களிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டு வீட்டிற்கு சென்றதும் அதனை நினைத்து சுயஇன்பம் அடைவதை வழக்கமாக்கி வைத்துள்ளார்.