3 பெண்களுடன் திருமணம்; மாறி மாறி குடும்பம் நடத்திய கிருஷ்ணகிரி மன்மதன் கைது!

Tamil nadu Marriage Crime Krishnagiri
By Jiyath Aug 23, 2023 06:27 AM GMT
Report

மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

3 பெண்களுடன்

திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா என்பாரின் மகன் கார்த்திக் (23). இவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக் உத்தனப்பள்ளியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.

3 பெண்களுடன் திருமணம்; மாறி மாறி குடும்பம் நடத்திய கிருஷ்ணகிரி மன்மதன் கைது! | Man Arrested Cheated By Marrying 3 Women I

இந்நிலையில்அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை முதல் மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து விவசாய வேலைக்கு செல்லும் மற்றோரு பெண்ணையும் முதல் இரண்டு மனைவிக்கும் தெரியாமல் 3வதாக கோவிலில் தாலி கட்டிதிருமணம் செய்து கொண்டார். பல நாட்களாக 3 பேருடனும் மாறி மாறி குடும்பம் நடத்தி வந்துள்ளார் கார்த்திக்.

கைது

இந்நிலையில் மன்மதன் கார்த்திக்கின் லீலைகள் குறித்து 3 பெண்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 3 பெண்களும் தங்களது பெற்றோருடன் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.