திரைப்பட பாணியில்..திருமணம் முடிந்த சில நேரங்களில் கணவர் கைது - கல்லூரி மாணவி ஷாக்!

Tamil nadu Marriage Crime Dindigul
By Swetha Jun 26, 2024 10:00 AM GMT
Report

திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பம் அதிர்ச்சி அளித்துள்ளது.

கணவர் கைது 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் வசந்த் (22). இவர் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே காதலாக மாறியுள்ளது.

திரைப்பட பாணியில்..திருமணம் முடிந்த சில நேரங்களில் கணவர் கைது - கல்லூரி மாணவி ஷாக்! | Man Arrested Arrested Right After Getting Married

பின்னர் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த போது பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, வசந்த் தனது காதலியை வடமதுரையில் உள்ள கோவிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெண்வீட்டார் தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்த அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

போலீசார் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர். அதற்குள் தனது மனைவியுடன் வசந்த் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து கைது செய்தனர். மேலும் வற்புறுத்தி காரில் அழைத்துச் செல்ல முயன்றனர்.

நிர்வாணமாக்கி உடலில் சூடு.. மனைவியை டார்ச்சல் செய்த கணவன்!

நிர்வாணமாக்கி உடலில் சூடு.. மனைவியை டார்ச்சல் செய்த கணவன்!

கல்லூரி மாணவி

சினிமா காட்சிகளைப் போல நடந்ததை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மாணவியிடம் வந்த கும்பல் விசாரித்த போது தங்களுக்கு இப்போதுதான் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறினார்.

திரைப்பட பாணியில்..திருமணம் முடிந்த சில நேரங்களில் கணவர் கைது - கல்லூரி மாணவி ஷாக்! | Man Arrested Arrested Right After Getting Married

இதனை தொடர்ந்து வசந்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவர்கள் தாங்கள் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் என தெரிவித்தனர். வசந்த் விருதுநகரில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடியதால் அவரை பிடிக்க மப்டியில் தேடி வந்து அவரை கைது செய்ததாகவும் கூறினர்.

இதைக்கேட்ட மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் போலீசார் அவருக்கு ஆறுதல் சொல்லி மீண்டும் ஊருக்கு செல்லுமாறு அறிவுரை கூறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.