காதலியின் செல்போன் பிஸி - கிராமத்தையே பழிவாங்கிய காதலன்!
காதலி மீதான கோபத்தில் இளைஞர் ஒருவர் கிராமத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.
காதல் விவகாரம்
பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பக்கத்து ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். வழக்கம்போல், தனது காதலிக்கு போன் செய்துள்ளார்.
ஒன்றுக்கு பலமுறை கால் செய்தபோதும், அவர் எடுக்காமல் இருந்துள்ளார். மேலும், செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது.
இளைஞர் செய்த செயல்
இதில் ஆத்திரமடைந்த காதலன் திடீரென காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின் வழித்தடத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த மின் கம்பிகளை ஒவ்வொன்றாக துண்டித்துள்ளார்.
கரண்ட் இருந்தால் தானே சார்ஜ் போட்டு காதலி யாரிடமாவது பேசுவார் என்று எண்ணி, ஒட்டு மொத்த கிராமத்தையும் பழிவாங்கியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க மின்வாரியம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.