23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி; போலீஸ் விரித்த வலை - சிக்கியது எப்படி!
23 ஆண்டுகளாக தேடப்பட்ட கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேடப்பட்ட குற்றவாளி
கடந்த 2000ம் ஆண்டு சென்னை, பூந்தமல்லி அருகே நடந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய டேவிட் பினு என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு தப்பி ஓடினார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டேவிட் பினுவை போலீசார் பல ஆண்டுகள் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் கேரள மாநிலத்தில் இருப்பதை தெரிந்து விசாரணை செய்ததில், பினு கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கைது
ஆனால் அவரின் பெயர் மற்றும் விவரங்களில் முரண்பட்டு ஏற்பட்டதால் கைரேகையை கொண்டு காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் டேவிட் பினுவை குறித்த உண்மை வெளிவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி டேவிட் பினுவை 23 ஆண்டுகள் கழித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.