தாய்க்கு 2வது திருமணம் செய்துவைத்த மகன் - வைரலாகும் வீடியோ!
மகன் தனது தாய்க்கு 2வது திருமணம் செய்துவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2வது திருமணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாய் விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த செயல் வைரலாகி வருகிறது.
அப்துல் அஹாத் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 18 வருடங்களில் என்னால் இயன்றவற்றை செய்து எனது தாயாரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்து வருகிறேன்.
வைரல் வீடியோ
அவர் எங்களுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார். எனது தாயார் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர். ஒரு மகனாக நான் சரியானதை செய்தேன் என்று நினைக்கிறேன். எனது தாயாரின் 2-வது திருமணம் குறித்து வெளியில் சொல்ல பல நாட்களாக பயந்தேன்.
ஆனால் இப்போது நீங்கள் காட்டும் அன்பும், பாசமும் என்னை உணர்ச்சி பெருக்கில் மூழ்கடிக்கிறது. எங்களது இந்த முடிவுக்கு மதிப்பளித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.