ஆடையில்லாமல் பக்கத்தில் படுத்த முதியவர்; அலறிய இளம்பெண் - கைது செய்த போலீசார்!

Tamil nadu
By Jiyath Jul 24, 2023 07:11 AM GMT
Report

இளம் பெண்ணின் பக்கத்தில் நிர்வாணமாக தூங்கிய முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிர்வாணமாக உறங்கிய முதியவர்

சென்னை திருமங்கலம் பகுதியில் ஐடியில் பணி புரியும் பெண் ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் அந்த பெண் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் தனது பக்கத்தில் யாரோ ஒருவர் படுத்திருப்பதாக உணர்ந்துள்ளார்.

ஆடையில்லாமல் பக்கத்தில் படுத்த முதியவர்; அலறிய இளம்பெண் - கைது செய்த போலீசார்! | Man And Why Did Police Arrest 5 Old Ponnusamy Ibc

எழுந்து பார்த்தபோது உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக முதியவர் ஒருவர் பக்கத்தில் படுத்திருந்தார். இதை பார்த்ததும் பயந்து அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளார் அந்த பெண். இவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர்.

இது ஏதும் அறியாமல் கூட பொன்னுசாமி தூங்கிக்கொண்டே இருந்துள்ளார். பின்னர் அனைவரும் அவரை எழுப்பி விசாரித்துள்ளனர்.

போலீசார் கைது

அப்போது அந்த முதியவர் "தனது பெயர் பொன்னுசாமி, தனக்கு 51 வயதாகிறது. ஈரோடு மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்தவர் என்றும் பொள்ளாச்சியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வனவராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆடையில்லாமல் பக்கத்தில் படுத்த முதியவர்; அலறிய இளம்பெண் - கைது செய்த போலீசார்! | Man And Why Did Police Arrest 5 Old Ponnusamy Ibc

மேலும், தனது சொந்தக்காரர் மகனை ஐஏஎஸ் அக்காடமியில் சேர்த்து விடுவதற்காக சென்னை வந்து திருமங்கலத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். பொன்னுசாமி இரவு மது அருந்தி விட்டு போதையில் மொட்டை மாடியில் அப்படியே படுத்து தூங்கியிருக்கிறார். அதே போதையில் இரவு இறங்கி வந்து ஐடி பெண் ஊழியரின் அப்பார்ட்மெண்டுக்குள் தவறுதலாக நுழைந்து அந்த பெண்ணின் பக்கத்திலேயே நிர்வாணமாக படுத்துள்ளார்.

போதையில் தெரியாமல் இப்படி நடந்து விட்டதாக பொன்னுசாமி கூறியுள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு அந்த பெண் புகார் கொடுக்க பொன்னுசாமியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.