அளவுக்கு மீறி கஞ்சா அடித்த இளைஞர் ... கடைசியில் நிகழ்ந்த விபரீதம்
தாய்லாந்தில் அளவுக்கு மீறிய கஞ்சா பழக்கத்தால் இளைஞர் செய்த செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா புகைப்பது தொடர்பாக சமூகத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றது. புத்துணர்ச்சி அளிப்பதாகவும், மருத்துவ குணம் பொருந்தியது என்றும் கற்பனை திறனை அதிகரிப்பதாகவும் கூறும் நிலையில் உடலுக்கு தீங்கானது, உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும், சமூகத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என மறுபுறமும் கூறப்படுகிறது.
அந்த வகையில் தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அளவுக்கு மீறிய கஞ்சா போதையின் போது பாலியல் எண்ணம் இல்லாமலேயே ஆணுறுப்பில் விரைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வலியும் ஏற்பட அதனைப் போக்க எண்ணி கத்தரிக்கோலால் தனது ஆணுறுப்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்டார்.
ரத்தம் நிற்காமல் வந்துள்ள நிலையில் 2 மணி நேரம் கழித்து அந்த இளைஞர் மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் 2 வாரம் கழித்து உட்கார்ந்த நிலையில், சிறுநீர் கழிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை முன்னேறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.