மனைவியிடம் சில்மிஷம்... கணவன் முன்னே போலீஸ்காரர் அட்டகாசம்!
அரசு பேருந்தில் பயணித்த பெண்ணை கணவர் முன்னே சீண்டிய போலீஸ்காரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண்ணிடம் சில்மிஷம்
சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு சென்ற அரசு பேருந்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் சென்றுள்ளார். அப்போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையறிந்த அப்பெண்ணின் கணவர் அந்த நபரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த நபர் ஆவடியில் தான் காவல்துறை அதிகாரியாக உள்ளேன்.
தட்டிகேட்ட கணவன்
தூக்க கலக்கத்தில் கை தெரியாமல் பட்டுவிட்டது . அமைதியாக உட்காரு என்று ஏளனமாக பேசியதாக தெரிகிறது. ஆனால் அப்பெண்ணின் கணவர் தொடர்ந்து அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட , தன்னை காவல்துறை அதிகாரி என்று கூறிய அந்த நபர்,
அப்பெண்ணின் கணவரை அடிக்கணும் பாய்ந்து உள்ளார். இதனால் பயந்து போன அப்பெண் கணவரை அமைதியாக உட்கார கூறியுள்ளார். அந்தப் பேருந்தில் 30 பயணிகள் பயணித்துள்ளனர்.
இதை வேடிக்கை பார்த்து வந்த நடத்துனர் மற்றும் சக பயணிகள் இருவரையும் சமாதானம் செய்தனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.