‘ஆபாச படத்துல நடிச்சியா நீ?’ - மனைவியை குத்தி கொன்ற கொடூர கணவன் - அதிர்ச்சி சம்பவம்
ஆபாச படத்தில் நடித்ததாக சந்தேகித்து மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான பாஷா. இவரது மனைவி முனீபா. இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஆபாச படங்களுக்கு அடிமையான பாஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆபாச படத்தை பார்த்திருக்கிறார். அதில் தனது மனைவி நடித்திருப்பதாக பாவித்துகொண்டு முனீபா மீது சந்தேகித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.
பாஷவிற்கு மனைவி மீது சந்தேகம் முற்றிப்போகவே கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தங்கள் குழந்தைகள் முன்னிலையிலேயே முனீபாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த முனீபாவின் தந்தை காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து பாஷாவை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச படத்திற்கு அடிமையான ஆட்டோ டிரைவர் சந்தேகத்தால் மனைவியை பெற்ற குழந்தைகளின் கண்முன்னே கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.