அமலா ஷாஜியால ஏமாந்துட்டேன்..? பணத்தை இழந்து தவிக்கும் ஐடி ஊழியர்..?

Money
By Karthick Jan 01, 2024 02:59 PM GMT
Report

அமலா ஷாஜியால் பணம் அனுப்பி தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளார்.

அமலா ஷாஜி

இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக இருந்து வருபவர் அமலா ஷாஜி. சமூகவலைத்தளங்களில் இவருக்கேனே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

man-accuses-amala-shaji-is-reason-for-money-loss

இவ்வாறு பிரபலமாக இருக்கும் பலரும் சமூகவலைத்தளங்களில் பணம் பெற்று சில promotion பணிகளையும் செய்து வருகின்றார். அவ்வாறு, அமலா ஷாஜி promote செய்த இருவேறு promotion மூலம் இளைஞர் ஒருவர் தான் பணம் இழந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பண மோசடி

ஐடி ஊழியர் ஒருவர் தெரிவித்திருக்கும் இந்த பணமோசடி - அதாவது குறைந்த தொகை பணம் கொடுத்தால் அதை ஒரு மணி நேரத்தில் பல மடங்காக அதிகரித்து தருகிறேன் என அமலா ஷாஜி promote செய்த தளங்களின் மூலம் அந்நபர் பணத்தை இழந்துள்ளார்.

man-accuses-amala-shaji-is-reason-for-money-loss

தான் அமலா ஷாஜி promote செய்ததை பார்த்து தான் இப்படி பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டதாக கூறிய அவர், இது குறித்து போலீஸ் complaint அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.