ஒரே நேரத்தில் 6 மனைவிகளையும் கர்ப்பமாக்கிய நபர் - வைரலாகும் வீடியோ!
நபர் ஒருவரின் 6 மனைவிகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
6 மனைவிகள்
கென்யாவில் ஒரே மனிதனின் ஆறு மனைவிகளும் ஒரே நேரத்தில் இயற்கையாக கர்ப்பமாகியிருப்பது ஆப்பிரிக்காவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்த வீடியோவில், அவரது ஆறு மனைவிகளும் கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் காணப்படுகிறார்கள். அவர்களில் சிலர் 7 மாத கர்ப்பமாகவும், சிலர் 5 மாதங்களாகவும் இருப்பதாக தெரிகிறது.
வைரலாகும் வீடியோ
அந்த ஆணின் குடும்பத்தினர் கூறுவதன்படி, ஒவ்வொரு மனைவியும் சில வார இடைவெளியில் கர்ப்பமாகியுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த குடும்பம் ஒரு தொலைதூரக் காட்டு சமூகத்தில் வசிக்கிறது.
மேலும், தினமும் தனது ஆறு மனைவிகளின் காலை வாந்தி, உணவுகள் மற்றும் கர்ப்பம் சார்ந்த சிக்கல்களை ஒரே நேரத்தில் கவனிப்பது அந்த கணவருக்கு பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆறு குழந்தைகளை ஒரே நேரத்தில் வரவேற்க தயாராகும் இந்த குடும்பம், அதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.