ஆடையை கழட்டி நடிக்க சொன்ன இயக்குனர் - கடுப்பில் தமிழ் நடிகர்களை விமர்சனம் செய்த மம்முட்டி!
இப்படிப்பட்ட காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிய நடிகர் மம்முட்டி.
மம்முட்டி
இந்தியாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. இவர் மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவ்வளவு வயதாகியும் இன்னும் இளைஞர் போல் இருக்கிறார் என பலரும் இவரை வியப்புடன் பார்த்து வருகின்றன.
இவர் தமிழில் அழகன், தளபதி, ஆனந்தம், மறுமலர்ச்சி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார்.
தமிழில் மம்முட்டி தேவயானி இனைந்து நடித்த மறுமலர்ச்சி என்ற படம் 1998ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை கே.பாரதி இயக்கியிருந்தார். இதில் நடந்த ஒரு நிகழ்வு இப்போது வெளிவந்துள்ளது.
உங்க ஊரு ஹீரோ இப்படி நடிப்பாரா?
இந்த படத்தின் ஒரு காட்சியில் தேவயானியை பாம்பு ஒன்று கொத்த வரும்போது தேவயானியின் கையை பிடித்து இழுத்து மம்முட்டி காப்பாற்றுவார். அதில் மம்முட்டியை தவறாக புரிந்து கொண்டு தேவயானி அவரின் கன்னத்தில் அறைந்து விடுவார்.
அப்படி இந்த காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் பின் ஊரை சேர்ந்த ரஞ்சித் மம்முட்டியை கட்டி வைத்து வேட்டியை அவிழ்த்து அடிப்பார்.இந்த காட்சியை மம்முட்டியிடம் இயக்குனர் சொல்லியதும் அவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். உங்க ஊரு ஹீரோ இப்படி நடிப்பாரா? என்ன மட்டும் இப்படி நடிக்க சொல்றீங்க? என கோபமடைந்துள்ளார்.
எவ்வளவு சொல்லியும் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு இந்த காட்சி இல்லையென்றால் படமே இல்லை என இயக்குனர் சொல்லியதும் தான் மம்முட்டி இந்த காட்சியை நடித்து கொடுத்தாராம்.