சினிமாவில் அது கிடையாது..ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மனம் திறந்த மம்முட்டி!
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மம்முட்டி பேசியுள்ளார்.
சினிமாவில்..
மலையாள திரையுலகில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்த பல திடுக்கிடும் தகவல் வெளிவந்து கொண்டே உள்ளது. அதாவது நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக சொல்லி வருகின்றனர்.
இந்த விவகாரம் பற்றி மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் அமைதி காப்பது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், நடிகர் மோகன்லால் தனது பேஸ்புக் பதிவில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நேற்று கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அதன் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்களும் படத்தில் இருக்கின்றன. சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கும் துறைகளில் ஒன்று திரையுலகம்.
நடிகைகளிடம் அத்துமீறல்; திரையுலகை கட்டுப்படுத்தும் 15 முக்கிய புள்ளிகள் - ஹேமா அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
மம்முட்டி
அங்கு நடக்கும் சிறிய விஷயங்கள் கூட பெரிய விவாதமாக மாறும். அதில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கத் திரைத் துறையினர் கவனத்துடன் இருக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை முழு மனதுடன் வரவேற்கிறோம். அதைச் செயல்படுத்த அனைத்து திரைத்துறை சங்கங்களும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது.ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் உள்ளது.
இது தொடர்பாக எழுந்த புகாரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டனைகளை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகார மையம் என்பது கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.