ஷூட்டிங்கில் திடீரென பின்னாடி இருந்து அடித்த பாலா - தெறித்து ஓடிய மமிதா பைஜூ
இயக்குனர் பாலாவின் "வணங்கான்" படம் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வருகின்றது.
வணங்கான்
பாலா - சூர்யா கூட்டணியில் அறிவிக்கப்பட்ட முதலே பெரும் எதிர்பார்ப்பை வணங்கான் படம் பெற்றது. இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ'வும் நடித்து வந்தனர்.
ஆனால், என்ன காரணம் என்று தெரியாமலே படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. முழுவதுமாக சூர்யா படத்தில் இருந்து விலகினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படம் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வருகின்றது.
இந்நிலையில், படத்தில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு மலையாள நடிகை மமிதா பைஜூ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, வணங்கான் படத்தில் வில்லடிச்ச பாடிக் கொண்டே ஆடவேண்டிய நிலையில், சரியான பயிற்சி எடுத்துக் கொள்ள நேரம் கிடைக்கவில்லை என்பதால்
மூன்று டேக் முடிந்தும் தன்னால் சரியாக செய்யமுடியவில்லை என்று கூறி, அப்போது பின் இருந்த பாலா எனது தோள்பட்டையில் அடித்தார் என்றார் அவர்.