யாஸ் புயல் பாதிப்பை கண்கானிக்க கட்டுப்பாட்டு அறையிலே தங்கும் மமதா பானர்ஜி
வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கிறது. இதனால் ஆந்திரா, ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் பாதிப்படையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மூன்று மாநிலங்களிலும் கடுமையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கவனித்து வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆய்வு மேற்கொள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு வருகை தந்துள்ளார்.

புயல் தற்காப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட மமதா பானர்ஜி இன்று இரவு கட்டுப்பாட்டு அறையிலே தங்கி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை கண்கானிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.