கங்குலியை மட்டும் ஏன் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குகிறார்கள்? - முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்..!
கங்குலியை மட்டும் ஏன் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குகிறார்கள்? என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கடந்த 2018ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவராக இருந்து வந்தார். சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடப் போவதை அவரே உறுதி செய்துள்ளார். வரும் அக்டோபர் 22ம் தேதி அன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதன் மூலம் கங்குலி 2வது முறையாக தனது சொந்த ஊரின் சங்க தலைவராக பதவியேற்க இருக்கிறார். பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் நாளை மும்பைக்கு சென்று பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ரோஜர் பின்னியிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார் சவுரவ் கங்குலி.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்
இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில் -
பிசிசிஐ செயலாளர் பொறுப்பில் ஜெய்ஷா நீடிக்கும்போது, கங்குலியை மட்டும் தலைவர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்குகிறார்கள்?.
நியாயமற்ற முறையில் சவுரவ் கங்குலி நீக்கப்படுகிறார். அதற்கு ஈடுகட்டும் விதமாக ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிடுவதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.