இல.கணேசன் வீட்டு விசேஷம்..மேளம் அடித்த மம்தா பானர்ஜி : பரபரப்பான அரசியல் களம்

BJP Chennai Mamata Banerjee
By Irumporai Nov 03, 2022 07:24 AM GMT
Report

மேற்கு வங்க ஆளுநர் இல .கணேசனின் சகோதரனின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் தமிழிசை , நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இல.கணேசன் இல்ல விழா

 மேற்கு வங்க ஆளுநர் இல்ல கணேசனின் சகோதரர் கோபாலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது .

இந்த விழாவில் மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொதுச் செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் நடிகர் ரஜினிகாந்த் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தாமாக தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் பங்கேற்றனர் . 

செண்டை மேளம் அடித்த மம்தா 

குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக எம்பி டி ஆர் பாலு ஆகியோர் இல கணேசன் இல்லத்திற்கு வந்தனர் அவர்களை வரவேற்ற இல கணேசன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் .

இல.கணேசன் வீட்டு விசேஷம்..மேளம் அடித்த மம்தா பானர்ஜி : பரபரப்பான அரசியல் களம் | Mamata Banerjee Sendai Melam Ila Ganesan House

முன்னதாக விழாவில் பங்கேற்ற மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கு செண்டை மேளம் அடித்துக் கொண்டு வரும் சென்று அவருடன் செண்டை மேளம் அடித்து அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார் .

மேற்கு வங்க ஆஅளுநர் இல்ல விழாவில் இரண்டு மாநில முதல் அமைச்சர்கள் ஆளுநர் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது