மீண்டும் மீண்டும் வற்புறுத்திய மம்தா: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி. நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் வழிபட்ட பின் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னை தள்ளிவிட்டதாக மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இதில், கால் பகுதியில் பலத்த காயமடைந்த மம்தா கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை மருத்துவமனை தரப்பில் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் மம்தா பானர்ஜி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்தார்.
அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால், பொருத்தமான அறிவுறுத்தல்களுடன் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். 7 நாட்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.