நாய் கடித்தால் கூட அப்படி இருக்காது..மம்தா உடனே பதவி விலக வேண்டும் - குஷ்பு காட்டம்!
பெண் மருத்துவர் பாலியல் படுகொலை விவகாரத்தில் மம்தா பதவி விலக வேண்டும் என குஷ்பு கூறியுள்ளார்.
மம்தா பதவி
கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்றபெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த பாலியல் படுகொலை சம்பவத்தை வைத்து பார்க்கும் போது,
மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது என தோன்றுகிறது. மம்தா பானர்ஜி இந்தியாவிலேயே ஒரே பெண் முதல்வராக இருக்கிறார், மகளிர்க்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர் செய்து கொடுப்பார், மகளிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,
குஷ்பு காட்டம்
அவர் பிரச்னைகள் மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறார். ஒரு தாய் ஸ்தானதில் இருந்து கொண்டு தனது குழந்தைகளை பாதுகாப்பதில் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை,பயங்கரமான கொடுமை செய்து, உடலை வருத்தி, கடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
நாய் கடித்தால் கூட அவரது உடலில் உள்ள காயம் போல இருக்காது. அந்த பெண்ணின் உடலில் 150 கிராம் விந்து இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கிறது. இது ஒருவரால் அரங்கேறி இருப்பது கிடையாது, இது கூட்டுப்பாலியல் வன்கொடுமையாக தான் இருக்கும்.
பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் மம்தா பானர்ஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
முதல்வராக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என்பதே என் கேள்வி?. மேற்குவங்காள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாய் திறக்கவில்லை; ராகுல் காந்தி ஏன் பேசாமல் இருக்கிறார்?; பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்?. என்று கூறியுள்ளார்.