மம்தா மக்கள் முதுகில் குத்திவிட்டார்: பிரதமர் மோடி பேச்சு
மாநிலம் வளர்ச்சிக்காக, மக்கள் மம்தாவை நம்பினார்கள். ஆனால், மக்கள் முதுகில் மம்தா குத்திவிட்டார். என மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கொல்கத்தாவில் நடந்த பா.ஜ.பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மாநிலத்தின் வளர்ச்சியை திரிணமுல் காங்கிரஸ் நிறுத்தி வைத்திருப்பதாக கூறிய மோடி மக்கள் வளர்ச்சி நோக்கி நகர வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடிமாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு மம்தாவை மக்கள் நம்பினார்கள். ஆனால், மம்தா அவர்கள் முதுகில் குத்திவிட்டார். மாநில மக்கள் மீது மம்தாவின் ஆட்கள் அடக்குமுறையை ஏவிவிட்டார்கள். ஆனால், அவர்களால், மாநிலத்தின் நம்பிக்கையை புதைக்க முடியவில்லை.
வளர்ச்சி, அமைதியையே மே.வங்கம் விரும்புகிறது.பா.ஜ.,விற்கு ஆசி வழங்க மக்கள் விரும்புகிறார்கள். இதுவரை எந்த அரசும் செய்யாததை நாங்கள் செய்து முடிப்போம். மாநில வளர்ச்சிக்கு சிலர் தடையாக இருக்கிறார்கள். மம்தா கமிஷன் அரசாங்கம் நடத்தி வந்து கொண்டிருக்கிறார். லட்சகணக்கானோருடன் பா.ஜ., தொடர்பில் இருக்கிறது.
மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாகும். இந்த மண்ணின் மைந்தன் மிதுன் சக்ரவர்த்தி நம்முடன் உள்ளார். இந்த தேர்தலில்,திரிணமுல், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை உள்ளன. அவர்கள் மாநில விரோத போக்கு கொண்டவர்கள். இந்த கட்சிகள் மாநில வளர்ச்சியை விரும்பவில்லை.
ஆனால் மக்கள் வளர்ச்சியை நோக்கி காத்திருக்கின்றனர் . தேர்தல் முடிவுகள் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் கிடையாது.
உங்கள் மனதை வெல்ல நாங்கள் கடுமையாக உழைப்போம். மாநில வளர்ச்சி, அதிக முதலீடு, மாநிலத்தின் கலாசாரத்திற்கு பாதுகாப்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என உறுதி அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்.
இந்த தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும். அனைத்து துறைகளிலும் மாநிலம் வளர்ச்சி பெறும் இவ்வாறு அவர் பேசினார்.