ஆட்சி மாற்றம் டெல்லியில் தான் வரும் - மம்தா பெனர்ஜி பேச்சு
india
delhi
mamata
By Jon
ஆட்சி மாற்றம் நடைபெறுவது டெல்லியில் தான் என மம்தா பெனர்ஜி தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் வங்கத்தில் அல்ல, டெல்லியிலேயே நடைபெறும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சிலிக்குரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்துத் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ஆட்சி மாற்றம் வங்கத்தில் அல்ல டெல்லியிலேயே நடைபெறும் எனத் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனப் பிரதமர் கூறிய குற்றச்சாட்டை மறுத்த அவர், உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள நிலையைச் சுட்டிக்காட்டினார்.