பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள்; 7 நாட்களில் மரண தண்டனை - மம்தா அதிரடி!
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வரிச்சையில், அரசின் தலைமைச் செயலகம் நோக்கி மருத்துவ மாணவர்கள் பேரணி நடத்தினர். இதனை தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியது.
மரண தண்டனை
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நிறுவன நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் பாலியல் வன்கொடுமைக்குள்ளானவருக்கான நாளாக அர்ப்பணிக்கிறோம்.
மேற்கு வங்க மாநில சட்டசபையில் அடுத்த வாரம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை விதிக்கை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும்.
அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 31-ந் தேதி மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். அதில் தாமும் பங்கேற்பேன் என அறிவித்துள்ளார்.