ரூ.5க்கு முட்டைக் குழம்புடன் சாப்பாடு- திட்டத்தை தொடங்கி வைத்தார் மம்தா பானர்ஜி

West Bengal trinamool
By Kanagasooriyam Feb 16, 2021 04:30 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

in இந்தியா
Report

5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார். மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இதனையடுத்து, 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டுள்ளார். அதேசமயம் பாஜக அவருக்கு கடும் சவால் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை-எளிய மக்கள் பயன் அடையும் விதத்தில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 5 ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டைக்கறி கிடைக்கும் என்றும் ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் மம்தா தெரிவித்திருக்கிறார்.

சுய உதவிக்குழுக்களால் மதியம் 1 முதல் 3 மணி வரை இந்த உணவுக்கூடம் இயங்க இருப்பதாகவும், படிப்படியாக மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.