சூடுபிடிக்கும் தேர்தல்: டீ ஆற்றிய மம்தா பானர்ஜி
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்குள்ள தேநீர்க்கடையில் தேநீர் தயாரித்து வினியோகித்தார். கடந்த முறை போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியிலேயே மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்காக நந்திகிராம் சென்றுள்ள அவர், அங்குள்ள சண்டி தேவி கோயிலில் வழிபட்டார்.
அங்கு அம்மனுக்கு பட்டுப்புடவையை காணிக்கையாக வழங்கி மம்தா வழிபட்டார். கோயில் மரபுப்படி, அங்குள்ள மணியை ஒலித்தார் மம்தா பானர்ஜி பின்னர் யாரும் எதிர்பாராதவிதமாக அவர், சாலையோர தேநீர்க்கடைக்குள் நுழைந்தார்.
அங்கு மம்தா தேநீர் தயாரிக்கத் தொடங்கினார். தாம் தயாரித்த தேநீரை டம்ளர்களில் ஊற்றி, கடையிலிருந்தவர்களுக்கு வழங்கினார்.
#WATCH: West Bengal CM @MamataOfficial serves tea to everyone at a tea stall in #Nandigram. #MamataBanerjee #WestBengal | (@PoulomiMSaha) pic.twitter.com/hNmjeYiYJI
— IndiaToday (@IndiaToday) March 9, 2021