அடிபட்ட புலி போன்று தான் சினம் கொண்டு எழுந்து நிற்பேன் - மம்தா பானர்ஜி
அடிபட்ட புலி மிகவும் ஆபத்தான விலங்கு. அதுபோல் தான் சினம் கொண்டு எழுந்து நிற்பேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். நந்திகிராமில் தேர்தல் பரப்புரையின்போது கீழே தள்ளப்பட்டதால் காயமடைந்ததாக மம்தா பானர்ஜி கூறினார். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டு வருகிறார். கொல்கத்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தூய்மையற்ற சக்திகள் அழிக்கப்பட்டு, நல்லவை மேலோங்கட்டும் என்று பேசினார்.
மேற்கு வங்க மக்கள் மீண்டும் தங்களுக்கு வாக்களித்தால், ஜனநாயகம் அவர்களிடம் திரும்புவதை உறுதி செய்வோம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திற்கு எதிரான அனைத்து சதித்திட்டங்களும் அழித்தொழிக்கப்படும் என மம்தா கூறி இருக்கிறார்.
காயமுற்ற காலுடன் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார். த் தெரிவித்தார்.