மம்தாவை யாரும் தாக்கவில்லை: நேரில் பார்த்தவர் சாட்சியம்
நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு தொகுதி மக்களை சந்தித்த மம்தா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டால் அப்பகுதியே பரபரப்பானது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும் இன்னும் சில தினங்களில் பிரசாரத்துக்கு வந்துவிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மம்தா மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என நேரில் பார்த்த ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு தகவல் அளித்துள்ளார். அதில், அது ஒரு அசம்பாவிதம், மம்தாவின் கார் கதவு தூண் ஒன்றில் மேல் மோதியது யாரும் அவரைத் தாக்கவில்லை.
என்று ஒருவர் அந்தத் தனியார் தொலைக்காட்சிக்குக் கூறும்போது தான் சம்பவ இடத்தில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி ஊடகத்துக்கு மாணவர் ஒருவர் கூறும்போது, “முதல்வர் மம்தா வரும்போது அவர் காரை நோக்கி மக்கள் குவிந்தனர், அப்போது அவர் கழுத்தில், காலில் அடிபட்டது. அவரை யாரும் தள்ளவில்லை. கார் மிக மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.” என்று கூறியுள்ளார்.