கொரோனா இரண்டாம் அலைக்கு மோடியே காரணம் - மமதா பானர்ஜி

India Corona Modi Mamata Banerje
By mohanelango Apr 19, 2021 12:00 PM GMT
Report

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் இன்னும் மூன்று கட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய மமதா, ”நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கரோனா உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்.

இதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும். கரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு நரேந்திர மோடியே காரணம். தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டிருந்தால், தற்போது இரண்டாம் முறையாக கரோனா பரவும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

இந்தியா நேற்று 2,70,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளையும் 1,600க்கும் அதிகமான மரணங்களையும் பதிவு செய்துள்ளது.